ரேஷனில் பொருள் வாங்க வரும் நுகர்வோரை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை பாயும்: ஆணையர் எச்சரிக்கை

சென்னை: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நியாய விலை கடைகளுக்கு செல்ல இயலாத முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர நபர்கள் வசதிக்காக, நியாயவிலைக் கடைகளில் படிவங்களை இருப்பு வைத்து தேவைப்படும் அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடையிலேயே விநியோகித்து பூர்த்தி செய்து பெற்று தொடர்புடைய நடவடிக்கைகள் அனைத்தையும் நியாய விலைக்கடை பணியாளரே மேற்கொண்டு அட்டைதாரரின் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாக உணவு பண்டங்கள் விநியோகிக்க வேண்டும்.

இந்த அங்கீகார படிவம் இத்துறையின் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது புகார்கள் பெறப்படும் நிலையில் இதுவரை அங்கீகார படிவம் அளிக்காத அட்டைதாரர்கள் அங்கீகார படிவத்தினை நியாய விலை கடையில் பெற்று பூர்த்தி செய்து கடையில் வழங்கிய உடனேயே உணவு பண்டங்கள் விநியோகிக்க தொடர்புடையவர்களுக்கு மீண்டும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை மீறி இனி யாரேனும் எந்த குடும்பதாரரையும் அலைக்கழித்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: