மழைநீர் வடிகால்கள் மறுசீரமைப்பு பணிக்கான ரூ.119.93 கோடி டெண்டர் ரத்து: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் 144 இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களை, மறுசீரமைப்பு பணிக்காக விடப்பட்ட ரூ.119.93 கோடி  மதிப்பிலான டெண்டரை ரத்து செய்துள்ளதாகவும், குறுகிய கால இ-டெண்டர் விரைவில் விடப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் 2019ம் ஆண்டு பெய்த பருவமழையால், பல்வேறு இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்கள் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. அதில் 144 இடங்களில் மழைநீர் வடிகால் முழுவதும் பாதிப்படைந்து பராமரிப்பின்றி காணப்பட்டது.

இந்நிலையில் இந்த பாதிப்பை சீரமைக்க உலக வங்கி கடன் தர ஒப்புக்கொண்ட நிலையில் கிட்டத்தட்ட 144 இடங்களில் 43 தொகுப்புகளாக  சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, இதற்கான டெண்டர் முதலில் விடப்பட்டது. இதையடுத்து 43 தொகுப்புகளில் 42 தொகுப்புகளுக்கான டெண்டர் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி பெறப்பட்டது. ஆனால், அப்போது விடப்பட்ட டெண்டரில் குறைபாடு இருப்பதாக தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை தெரிவித்ததால், ஏற்கனவே விடப்பட்ட ரூ.119.93 கோடி டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

Related Stories: