பெங்களூரில் ரயில் இன்ஜின் தரம் புரண்டது: கோவை குர்லா எக்ஸ்பிரஸ் 3.30 மணி நேரம் தாமதம்

சேலம்: பெங்களூரில் ரயில் இன்ஜின் தரம் புரண்டு விபத்துக்குள்ளானதால், சேலம் வழியாக சென்ற ரயில்கள் தாமதமானது. கர்நாடக மாநிலம் ைமசூரில் இருந்து ஓசூர், சேலம் வழியாக மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை வழக்கம்போல மைசூரிலிருந்து கிளம்பிய ரயில், ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனிடையே இரவு 8.30 மணியளவில் பெங்களூர் அடுத்த ஹீல்ஹள்ளி ரயில்வே ஸ்டேசனுக்கு அருகே, ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற மினிலாரி மீது ரயில் மோதியது.

இதில் ரயிலின் சக்கரம் தடம் புரண்டு தண்டவாளத்ைத விட்டு இறங்கியது. இந்த விபத்து காரணமாக பெங்களூர் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மைசூர் ரயிலை தொடர்ந்து வந்த ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தொடர்ந்து பெங்களூர் கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடந்தது. இந்த விபத்தால், மைசூர் ரயில் சுமார் 3 மணிநேரம் தாமதமாக சேலம் வந்தது. தொடர்ந்து, மைசூர்-தூத்துக்குடி சிறப்பு ரயில், மும்பை-கோவை குர்லா எக்ஸ்பிரஸ் உள்பட, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் சுமார் 3 மணிநேரம் வரை தாமதமாக வந்தன.

இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.  இதனிடையே, கோவையில் இருந்து லோக்மன்யா திலக் டெர்மினல் செல்லும் ரயில், இன்று காலை 8.55 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட வேண்டும். ஆனால் இணைப்பு ரயில் வராததால், 3 மணிநேரம் 35 நிமிடம் தாமதமாக, மதியம் 12.30 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: