பிரபல நடிகையின் தந்தை மரணம்

திருவனந்தபுரம்: பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம் அடைந்தார். மலையாள சினிமாவில் ஒரு ஸ்மால் பேமிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். தொடர்ந்து மெமரிஸ், ரெட் வைன், டிரைவிங் லைசென்ஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் அமரகாவியம், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப் (75) இன்று கோட்டயம் அருகே பாலாவில் உள்ள வீட்டில் திடீரென மரணமடைந்தார். அவரது உடல் அடக்கம் நாளை நடக்கிறது.

Related Stories:

>