கன்டெய்னரில் கடத்திய ரூ9 ஆயிரம் கோடி ஹெராயின் பறிமுதல்

திருமலை: ஆந்திராவுக்கு டால்கம் பவுடர் என்ற பெயரில் கன்டெய்னரில் கடத்தி வந்த ரூ9 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு ஹெராயின் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புலனாய்வு அதிகாரிகள் மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருடன் குஜராத் மாநிலம் கட்ச் நகர் முந்த்ரா துறைமுகத்திற்கு சென்றனர்.

அங்கு ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த கன்டெய்னரை சோதனையிட்டனர். அதில், ஆப்கானிஸ்தானின் காந்தகாரில் உள்ள ஹாசன் ஹுசைன் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து, ஆந்திர மாநிலம் விஜயவாடா சத்தியநாரயணபுரத்தில் உள்ள ‘ஆஷி டிரேடிங்’ என்ற கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும் ‘முகத்திற்கு பூசும் டால்கம் பவுடர்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சந்தேகம் தீராத அதிகாரிகள், கன்டெய்னரை திறந்து சோதனையிட்டனர். அதில் ஹெராயின் போதை மருந்து கடத்தி வந்து துறைமுகத்தில் இறக்குமதி செய்ய இருந்தது தெரிய வந்தது.

இவை பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ9 ஆயிரம் கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். ெஹராயின் கடத்தலில் விஜயவாடாவில் உள்ள ஆஷி டிரேடிங் கம்பெனி நிர்வாகத்திற்கு தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>