விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அதிமுக நிர்வாகிக்கு வலை

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பூக்கார தெருவை சேர்ந்த 31 வயதான விதவை பெண், தனது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. அதிமுக மாவட்ட மீனவரணி இணை செயலாளராக உள்ளார். கடந்த மாதம் 20ம் தேதி வேளாங்கண்ணி கடைத்தெருவில் நின்று கொண்டிருந்த விதவை பெண்ணை பார்த்து விநாயகமூர்த்தி ஆபாசமாக பேசினார். அப்போது பொது இடத்தில் இப்படி பேசாதீர்கள் என்று சத்தம் போட்டு விட்டு அங்கிருந்து விதவை பெண் சென்று விட்டார்.

இதைதொடர்ந்து விதவை பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி அடிக்கடி பாலியல் தொல்லையை விநாயகமூர்த்தி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விதவை பெண் புகார் செய்தார். போலீசார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து தலைமறைவான விநாயகமூர்த்தியை தேடி வருகின்றனர்.

Related Stories:

>