ஆப்கானில் அதிகார மோதல் உச்சகட்டம் :தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை? பிணை கைதியாக துணை பிரதமர் சிறைவைப்பு

லண்டன்:ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதில் இருந்து, அவர்களுக்குள் மோதல் அதிகரித்துள்ளது. தற்கால அமைச்சரவை பட்டியல் வெளியான நிலையில், இன்னும் புதிய அரசு அமைக்கப்படாமல் குழப்பமான சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில், தலிபான் சுப்ரீம் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா கொல்லப்பட்டதாகவும், துணை பிரதமர் முல்லா பரதர் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.

இதுதொடர்பாக வெளியான செய்தியில், ‘தலிபான் தீவிரவாதிகளின் இரு பிரிவுகளுக்கிடையே அதிகார போட்டி வலுத்துள்ளது. தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா சுட்டுக் கொல்லப்பட்டார். ஹக்கானி பிரிவுடனான சண்டையில் முல்லா பரதர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார். தலிபான் அமைச்சரவையில் தலிபான் அல்லாத மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவருக்கு பதவி கொடுக்க வேண்டும்; அப்ேபாது தான் உலகின் பிற நாடுகள் தலிபான் அரசை அங்கீகரிக்கும் என்று வலியுறுத்தி வந்தார். இவரது கருத்து எடுபடாததால், அவரை சில நாட்களாக காணவில்லை.

பின்னர், கந்தகாரில் தான் இருப்பதாக கூறினார். இதுதொடர்பாக வீடியோவையும் வெளியிட்டார். ஆனால், இவர் பிணைக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹக்கானிக்கு பிரிவுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. தலிபான் அரசில் ஹக்கானிஆதிக்கம் அதிகமாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது’ என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: