குடும்பத்தில் ஒருவருக்‍கு பணி, வேலையின்றி பரிதவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ3,000 நிதியுதவி!: டெல்லி முதல்வரின் அதிரடி தேர்தல் வாக்குறுதி..!!

டெல்லி: குடும்பத்தில் ஒருவருக்‍கு அரசுப் பணி, வேலையின்றி பரிதவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி உள்ளிட்ட 7 அம்சங்கள் கொண்ட தேர்தல் வாக்குறுதியினை கோவாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அங்கு ஆளும் பாஜக கட்சியை வீழ்த்த காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக கோவா தலைநகர் பனாஜி சென்ற ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோவா சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றால் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசியல் வாதிகள் கொள்ளையடிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பரிந்துரையும், பணமும் இருந்தால் மட்டுமே அரசுப்பணி கிடைக்கும் என்ற நிலையை மாற்றி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி, கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா சார்ந்துள்ள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதால் அவர்களின் வேலை மறுசீரமைப்பு செய்யப்படும் வரை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும். வேலையின்றி பரிதவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி, தனியார் வேளையில் 80 சதவீதம் உள்ளூர் வாசிகளுக்கு வாய்ப்பு, சுரங்கங்களை மூடுவதால் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்களும் வேலை இழந்து பாதிக்கப்படுகின்றன. எனவே சுரங்கம் மீண்டும் தொடங்கும் வரை அவர்களுக்கும் மாதம் ரூ.5000  நிதி உதவி உள்ளிட்ட 7 அம்சங்கள் கொண்ட தேர்தல் வாக்குறுதியினை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.

Related Stories:

>