சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஊராட்சி ஒன்றிய குழு, மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்: மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை:  சென்னை தெற்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு, ஊராட்சி ஒன்றியக் குழு, ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: சென்னை தெற்கு மாவட்டம் தோமையர் மலை தெற்கு ஒன்றியம் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேர்தலில் வார்டு எண் 2- மேடவாக்கம் வேதகிரி,  சென்னை தெற்கு மாவட்டம் தோமையர் மலை தெற்கு ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தலில் 5 முதல் 10 வரை உள்ள வார்டுகளில் கோவிலம்பாக்கம் பன்னீர்செல்வம்,

நன்மங்கலம் சங்கீதா பாரதிராஜன், மேடவாக்கம் கல்பனா சுரேஷ், வேங்கைவாசல் மோகனப்பிரியா சரவணன், பெரும்பாக்கம் ரோஜா சந்திரசேகர் ஆகியோரும், தெற்கு மாவட்டம் தோமையர் மலை தெற்கு ஒன்றியம் ஊராட்சி மன்ற தேர்தலில் கோவிலம்பாக்கம் ஜீவா வெங்கடேசன், நன்மங்கலம் கிரி, மேடவாக்கம் சிவபூர்ணம் ரவி, வேங்கைவாசல் மனோநிதி, சித்தாலப்பாக்கம் எழில் பாண்டியன், பெரும்பாக்கம் ஆஷா குமார், ஒட்டியம்பாக்கம் நந்தினி தேவநாதன் ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>