உ.பி. சாமியார் நரேந்திர கிரி மரணத்தில் மர்மம்!: சி.பி.ஐ. விசாரணை கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு..!!

பிரயாக்ராஜ்: அகில பாரதிய அகடா பரி‌ஷத் அமைப்பின் தலைவர் ஆச்சார்யா நரேந்திர கிரி மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அலகாபாத்தில் உள்ள மடத்தில் நேற்று நரேந்திர கிரி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதன் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் 5 பக்க தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர். அதில் குறிப்பிடப்பட்டிருந்த படி முக்கிய சீடர்களில் ஒருவரான ஆனந்த் கிரி மற்றும் சீடர்கள் சந்தீப் திவாரி, அதயா திவாரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆனந்த் கிரியின் நடவடிக்கைகளில் நரேந்திர கிரி அதிருப்தியில் இருந்ததாகவும், இந்த கொலையில் ஆனந்த்-திற்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் மடத்திலிருந்து தன்னை நீக்குவதற்காக தனக்கு எதிராக சதி நடப்பதாக ஆனந்த் கிரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே நரேந்திர கிரி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அகில பாரதிய அகடா பரி‌ஷத் துணைத்தலைவர் தேவேந்திர சிங், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories:

>