சுகாதார நிலையம் முன்பு ஆஷா பணியாளர்கள் தர்ணா

வால்பாறை : வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் சுமார் 50 ஆஷா சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் 12 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். கிராமப்புற செவிலியர்களாக,ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் அவர்கள், மருத்துவ பணியாளராகவே அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் தற்போது புதிதாக துவங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு 12ம் வகுப்பு முடித்த, புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே தாங்கள் செய்து வந்த பணியை செய்ய, புதிய நபர்களை அனுமதிப்படைவிட, தங்களை அரசு அந்த பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், குறைவான சம்பளம் பெற்று வரும் தங்களுக்கு அப்பணிகள் ஒதுக்கப்பட்ட வேண்டும் எனவும்  தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

>