வாளையார் அருகே ஊருக்குள் புகுந்து ஐடிஐ சுவரை யானைகள் இடித்து அட்டகாசம்

பாலக்காடு : கேரளா-தமிழக எல்லையான பாலக்காடு-வாளையார் இடையே கஞ்சிக்கோடு தொழிற்பேட்டை அமைந்துள்ளது. கஞ்சிக்கோட்டை அடுத்த வலியேறி, குரடிக்காடு, கல்லேப்பிள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று காலை குட்டி யானைகள் உட்பட 17 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து தோட்டப்பயிர்களான தென்னை, வாழை, பாக்கு, ஊடுப்பயிர்கள் ஆகியவற்றை துவம்சம் செய்தன.

மக்கள் பட்டாசுகள் வெடித்தும், டிரம் சப்தம் ஒலித்தும் யானைகளை காட்டிற்குள் விரட்டினர். ஆனால் அவை  கஞ்சிக்கோடு ஐடிஐ சுற்றுச்சுவரை இடித்து அங்கேயே முகாமிட்டன. இத்தவகலறிந்த வாளையார், மலம்புழா வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து காட்டு யானைகளை பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்டியடித்தனர்.

Related Stories:

>