ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

கூடலூர் :  சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, நாட்டில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நீலகிரி மாவட்டம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் நேற்று மாபெரும் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகள், கட்சி அலவலகங்கள் முன்பு கருப்பு கொடியேந்தி கண்டன கோஷமிட்டனர். கூடலூர்: கூடலூர் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நகர அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மசினகுடி பஜார் செயலாளர் உத்தமன் தலைமையில் மசினகுடி பஜாரில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் நகராட்சி அலுவலக  பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரெனால்டு வின்சென்ட், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சின்னவர், ஒன்றிய துணை செயலாளர் பாபு, தொகுதி தொழில்நுட்ப அணி அமைப்பாளர் லெனார்டு, அரசு போக்குவரத்து எல்பிஎப் ரகுபதி, ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சௌந்தர், ரமேஷ், மகளிர் அணி ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூடலூர் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சிவா, சிபிஐ குணசேகரன், இ.யூ.முஸ்லீம் லீக் பைசல், மமக ரபி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் செல்வரட்ணம், பாபு, நகர பொருளாளர் ஜெயக்குமார், அணி நிர்வாகிகள் பிரதீஸ், தமிழழகன், புட்ராஜ் விஜயகுமார், தாகிர் பிரகாஷ், கலை, செல்வபாரதி, சேகர் மற்றும் சத்தியசீலன், நடராஜ், தமிழ், பரமன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.நடுவட்டம் பேருந்து நிலைய பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தோழமைக் கட்சி நிர்வாகிகள் உதயகுமார், கலியமூர்த்தி, விக்டர்பால், மாதவன் குமாரதாஸ், ரவி, செல்லையா, திருமலை, குமார், சுதர்சன், புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பந்தலூர்: பந்தலூரில் முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி தலைமையில் அவரது வீட்டின் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நகர துணை செயலாளர் சிவசுப்பிரமணியம் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஸ்ரீராம்,ரவிச்சந்திரன், மஞ்சு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பந்தலூர் அருகே  ஏலமன்னா பகுதியில் நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. நகர இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன், துணை அமைப்பாளர் நவநீதராஜ்,முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார், அப்துல்சலீம் கலந்துகொண்டனர்.பந்தலூர் ஒன்றியம் எருமாடு பகுதியில் பொதுக்குழு உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சேரங்கோடு ஊராட்சி துணை தலைவர் சந்திரபோஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அய்யன்கொல்லி பஜாரில் சேரங்கோடு ஊராட்சி உறுப்பினர் கோபால் தலைமையில் நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டத்தில் வார்டு செயலாளர் பசீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டன. தேவாலா வாளவயல் பகுதியில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.குன்னூர்: திமுக மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி முன்னிலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் திமுக நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் சதக்கதுல்லா, நகர துணை செயலாளர் முருகேசன், நகர பொருளாளர் ஜெகநாத் ராவ், மாவட்ட பிரதிநிதி ஜாகீர், ரகீம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் காவிரி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மார்ட்டின், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மணிகண்டன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மஞ்சூர்: மஞ்சூரில் உள்ள அண்ணா அறிவாலயம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ராஜூ தலைமை தாங்கினார்.

மாவட்ட பிரதிநிதிகள் மாடக்கன்னு, ஈஸ்வரன், கீழ்குந்தா பேரூர் கழக அவைதலைவர் ஆறுமுகம், குந்தா வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் நேரு, செயலாளர் ஆனந்த்குமார், திமுக கிளை செயலாளர்கள் நாதன், மோகன்தாஸ், ஆல்துரை, முஸ்தபா, பாலன், ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

 இளைஞரணி நிர்வாகிகள் சிவக்குமார், சண்முகன், குமார், பிரபு, அஜித், ஷாஜி, சந்தோஷ், லுாயிஸ், நாகராஜ், சின்னாங்கு, மணி, சக்தி, ரகு மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி அலியார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். இதேபோல் மஞ்சூர் அருகே உள்ள பெங்கால்மட்டம் தேனாடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் பில்லன் தலைமை தாங்கினார்.

பாலகொலா ஊராட்சி கவுன்சிலர் ராஜேஸ்வரி, கிளை செயலாளர்கள் ராம்குமார், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். திமுக நிர்வாகிகள் தேவன், காமராஜ், லட்சுமணன், ராமலிங்கன், தேவராஜ், சந்திரன், ரமேஷ், லட்சுமணன், ராஜேந்திரன், வசந்தா, சுவாதி உள்பட பலர் பங்கேற்றார்கள். கோக்கலாடா பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாலகொலா ஊராட்சி திமுக செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். திமுக நிர்வாகிகள் ஆல்தொரை, குமார், லீலாவதி, சுசிலா, ரதீஷ், சகுந்தலா, ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Related Stories: