நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிடம் 119 ஆபாச வீடியோக்‍கள் இருந்ததா?: ரூ. 9 கோடிக்கு விற்க திட்டம்.. மும்பை போலீஸ் பகிர் தகவல்..!!

மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிடம் 119 ஆபாச வீடியோக்‍கள் இருந்ததாகவும் அதனை 9 கோடிக்கு விற்க அவர் திட்டமிட்டிருந்ததாகவும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. ஆபாச படங்களை தயாரித்து விற்பனை செய்த வழக்கில் அவரை மும்பை போலீசார் கடந்த ஜூலை 19ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்தனர். 61 நாட்களுக்கு பிறகு  ராஜ் குந்த்ராவுக்கு 50 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தலைமறைவாகியுள்ள ராஜ் குந்த்ராவின் உதவியாளர்களான யாஷ் தாகூர், பிரதீப் பக்ஷி ஆகியோரை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜ் குந்த்ரா வழக்கு பற்றி தகவல் தெரிவித்துள்ள மும்பை குற்றப்பிரிவு போலீசார், ராஜ் குந்த்ராவின் செல்போன், லேப்டாப், ஹார்ட் டெஸ்க்குகள் ஆகியவற்றில் 119 ஆபாச வீடியோக்‍கள் இருந்ததாகவும், அந்த வீடியோக்களை 9 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ பிசினஸ் செய்தது தனக்கு தெரியாது என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். தன் வேலையில் பிசியாக இருந்ததால் கணவர் என்ன செய்கிறார் என்பதை கவனிக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>