ஒன்றிய பாஜ  அரசை கண்டித்து திமுக கூட்டணி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கையில் திமுக நகர் செயலாளர் துரைஆனந்த் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி அமைப்பாளர் அயூப்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கலைஞர் மாளிகை முன் மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, திருப்புவனத்தில் திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் வசந்திசேங்கைமாறன், கடம்பசாமி, நகர செயலாளர் நாகூர்கனி, காங்கிரஸ் சார்பில் செந்தில்குமார், மாரிமுத்து, மார்க்சிஸ்ட் சார்பில் தண்டியப்பன், அய்யம்பாண்டி, இ.கம்யூனிஸ்ட் சார்பில் சுந்தரலிங்கம், மதிமுக சார்பில் முத்திருளு, விசிக சார்பில் கண்ணன் மற்றும் திமுகவினர், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தென்னவன்,நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் எம்எல்ஏ சுபதுரைராஜ் கலந்து கொண்டனர்.

சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் சின்னத்துரை தலைமையில் நடந்தது. காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ மாங்குடி தலைமை வகித்தார். நகர தலைவர் பாண்டிமெய்யப்பன், வட்டார தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். திக சார்பில் வட்ட செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். திக மண்டல தலைவர் சாமிதிராவிடமணி முன்னிலை வகித்தார். மதிமுக ஆட்டோபழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளையான்குடி சூராணத்தில் ஒன்றிய பொருப்பாளர் தமிழ்மாறன்.முனைவென்றியில் எம்எல்ஏ தமிழரசி, ஒன்றிய பொருப்பாளர் வெங்கட்ராமன், சாலைக்கிராமத்தில் ஒன்றியச் செயலாளர் செல்வராஜன் தலைமை தாங்கினார். திருப்புத்தூர் அருகே கோட்டையிருப்பில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழு தலைவருமான சண்முகவடிவேல் தலைமையில் கருப்பு  கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய துணைச்செயலாளர் முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிள் பலர் பங்கேற்றனர். இதேபோன்று கல்லல் ஒன்றியம் குன்றக்குடியில் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன்,திருப்புத்தூர் நான்கு ரோட்டில் நகர செயலாளர் கார்த்திகேயன், கீழச்சிவல்பட்டியில் வடக்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் தலைமையில் நடந்தது. சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேவகோட்டையில் நகர நகரச்செயலாளர்  பாலமுருகன்  வீட்டு முன்பாக கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்புவனம் அருகே அச்சங்குளத்தில் முன்னாள் ஒன்றிய    இளைஞர் அணி செயலாளர் முருகன் தலைமையில் கருப்புக்கோடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏனாதி இளங்கோவன், காங்கிரஸ் நகர் தலைவர் நடராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர். மானாமதுரையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி. நகர செயலாளர் பொன்னுச்சாமி, காங். மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சஞ்சய் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காளையார்கோவிலில் கிழக்கு வடக்கு தெற்கு ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நகர் பொறுப்பாளர்கள், பொறுப்புக்குழு நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, கிளை செயலாளர்கள், சார்பு அணி மற்றும் கழக தொண்டர்கள் கையில் கருப்புக் கொடியேந்தி பாஜகவை கண்டித்தும்  ஒன்றிய அரசை எதிர்த்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பபட்டது.

சிங்கம்புணரியில் முன்னாள் எம்எல்ஏ அருணகிரி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பூமிநாதன் முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், செயற்குழு உறுப்பினர் கணேசன்,காங்கிரஸ் வட்டார தலைவர் ஜெயராமன், முன்னாள் மத்திய கயிறு வாரியம் உறுப்பினர் குழந்தை வேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எஸ்.புதூர் ஒன்றியம் பகுதியில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் போராட்டம் நடந்தது.

Related Stories: