2019ம் ஆண்டை விட 2020ம் ஆண்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மத்திய மண்டலத்தில் அதிகரிப்பு-சைபர் கிரைம் மோசடிகளின் எண்ணிக்கையும் உயர்வு

திருச்சி : 2019ம் ஆண்டை விட 2020ம் ஆண்டில் மத்திய மண்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது. மேலும் சைபர் கிரைம் மோசடிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒவ்வொரு ஆண்டு நாடும் முழுவதும் பெண்களுக்கு எதிராக பதிவாகும் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடும். இதன்படி கடந்த 2020ம் ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பதிவான குற்றங்கள் தொடர்பான அறிக்கை ெவளியிட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் 2020ம் ஆண்டு 6,630 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளது. மேலும் வயதானவர்களுக்கு எதிராக 1,581 குற்றங்களும், பட்டியல் இன மக்களுக்கு எதிராக 1,274 குற்றங்களும் நடந்துள்ளது. இதை தவிர்த்து 2,898 பொருளாதார குற்றங்களும், 782 சைபர் குற்றங்களும், 42,756 சூழியலுக்கு எதிரான குற்றங்களும் பதிவாகி உள்ளது. இதன்படி பார்த்ததால் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதன்படி 2020ம் ஆண்டு அரியலூர் மாவட்டடத்தில் 67 குற்றங்களும், கரூர் மாவட்டத்தில் 85 குற்றங்களும், நாகையில் 144 குற்றங்களும், பெரம்பலூரில் 60 குற்றங்களும், புதுக்கோட்டையில் 212 குற்றங்களும், தஞ்சையில் 210 குற்றங்களும், திருவாரூரில் 175 குற்றங்களும் பதிவாகி உள்ளது. திருச்சியில் 217 குற்றங்களும், திருச்சி மாநகரில் 87 குற்றங்களும் பதிவாகி உள்ளது,

இதில் அரியலூரில் 6, கரூரில் 5, நாகையில் 11, பெரம்பலூரில் 1, புதுக்கோட்டையில் 14, தஞ்சையில் 11, திருவாரூரில் 57, திருச்சியில் 16, திருச்சி நகரத்தில் 3 என்று மொத்தம் 124 கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் அரியலூரில் 9, கரூரில் 4, நாகையில் 14, பெரம்பலூரில் 3, புதுக்கோட்டையில் 7, தஞ்சையில் 3, திருவாரூரில் 10, திருச்சியில் 17, திருச்சி நகரத்தில் 6 என்று மொத்தம் 73 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளது.

மத்திய மண்டத்தில் 574 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளது. இதன்படி அரியலூரில் 49, கரூரில் 33, நாகையில் 66, பெரம்பலூரில் 69, புதுக்கோட்டையில் 56, தஞ்சையில் 80, திருவாரூரில் 83, திருச்சியில் 158, திருச்சி நகரத்தில் 46 குற்றங்கள் பதிவாகி உள்ளது. அதில் அரியலூரில் 38, கரூரில் 31, நாகையில் 66, பெரம்பலூரில் 36, புதுக்கோட்டையில் 42, தஞ்சையில் 54, திருவாரூரில் 61, திருச்சியில் 90, திருச்சி நகரத்தில் 36 என்று மொத்தம் 448 போக்சோ குற்றங்களும் பதிவாகி உள்ளன.

சைபர் குற்றங்களை பொறுத்த வரையில் அரியலூரில் 10, கரூர் 10, நாகையில் 12, பெரம்பலூரில் 9, புதுக்கோட்டையில் 69, தஞ்சையில் 35, திருவாரூரில் 24, திருச்சியில் 18, திருச்சி நகரத்தில் 24 என்று மொத்தம் 211 வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆனால், 2019ம் ஆண்டு மொத்தம் 77 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

Related Stories: