ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ரூ.1597 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் கீழ் ரூ.1597 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளர் கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 699.26 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் வங்கிக்கடன் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் பல்வேறு திட்டங்ககளில் ஆணைகள் வழங்குவது மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது வழங்கினார்.

இதனை தொடர்ந்து சமூக நலத்துறையின் சார்பாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 699 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்கள் வழங்குவது இலகுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் மகளிருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய வகையில் 699 கோடி ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

Related Stories:

>