3வது முறையாக கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ! : இம்முறையும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனது

ஒட்டாவா: கனடாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெல்லவில்லை. கனடாவில் வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019 நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி கனடாவில் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் கனடா நாடாளுமன்றம் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள போதும், பெரும்பான்மையை அடைவதற்காக இடைத்தேர்தலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்தார்.

அதன்படி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அங்கு செப்டம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எரின் ஓ டூல் களமிறங்கினர். கனடா பொதுதேர்தல் நேற்று முடிந்த நிலையில், உடனே முடிவுகள் வெளியாகின. தனிபெருபான்மைக்கு மொத்தம் 170 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 156 இடங்களில் வென்று 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. எனினும் இந்த முறையும் அந்த கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.  கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. bq கட்ங்கதலைமையிலான லும், ndp f;lpr 28 இடங்களிலும் grn கட்சி 2 இடங்களிலும் முன்னிலையுல் உள்ளது. மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால் சிறுபான்மை அரசின் பிரதமராகவே அடுத்த 4 ஆண்டுகள் ஜஸ்டின் ட்ரூடோ தொடரப்போகிறார்.

Related Stories: