பேட்டை முள்ளிகுளத்தில் மீண்டும் அமலைகள் ஆக்கிரமிப்பு-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பேட்டை : பேட்டை முள்ளிக்குளத்தில் மீண்டும் அமலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.இதில் நெல்லை நகரத்தின் குளங்கள் தூர்வாரப்பட்டு,அமலை செடிகள் அப்புறப்படுத்தப்பட்டு வேலிகள் அமைத்து சுத்தப்படுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

பேட்டை முள்ளி குளமானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரையோரங்கள் பராமரிக்கப்பட்டு அமலை செடிகள் அகற்றப்பட்டது.அவை குளத்தின் கரையோரங்களில் மலை போல் குவிக்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.இவை சரிவர அப்புறப்படுத்தப்படாததால் அவை மீண்டும் துளிர் விட்டு வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது  குளத்தினை சுற்றி வேலி அமைக்கப்பட்டு வரும் பகுதியில் மீண்டும் அமலைச் செடிகள் ஆக்கிரமித்துள்ளது.இவை நாளடைவில் வேகமாக பரவி குளத்தினை முற்றிலும் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும்.எனவே வேலி அமைப்பதற்கு முன்பாக அமலைச் செடிகள் முற்றிலும் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Related Stories: