திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம்-ரூபி மனோகரன் எம்எல்ஏ திறந்துவைத்தார்

களக்காடு : திருக்குறுங்குடியில் அரசின் நெல் கொள்முதல் நிலையத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார். விவசாயிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் திருக்குறுங்குடியில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை ரூபி மனோகரன் எம்எல்ஏ திறந்துவைத்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார், பரமசிவன், திமுக நகரச் செயலாளர் கசமுத்து, மாவட்டப் பிரதிநிதி மாடசாமி, மாரியப்பன், சங்கரபாண்டி, மதிமுக ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், திருநாவுக்கரசு, காங் முன்னாள் மாவட்டத் தலைவர் தமிழ்செல்வன், வட்டாரத் தலைவர் தனபால், ஜார்ஜ் வில்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இங்கு 100 கிலோ பெரிய ரக நெல் ரூ 1,918க்கும், சிறிய ரக நெல் ரூ 1,1958க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்ய மறுப்பு

கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று ஏராளமான விவசாயிகள் மூடைமூடையாக நெல்லை கொண்டு வந்திருந்தனர். விஏஓவிடம் 10க்கு 1 அடங்கலும் பெற்றிருந்தனர். இருப்பினும் கொள்முதல் நிலைய ஊழியர்களோ, வேளாண் துறை வழங்கிய விவசாயிகள் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்வோம் என்று மறுத்துவிட்டனர். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான விவசாயிகள், நெல்லை விற்க முடியாமல் வேதனையுடன் திரும்பினர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் கூறுகையில் ‘‘வேளாண் துறை வழங்கிய பட்டியலில் குளறுபடி உள்ளது. பயிர் செய்யும் விவசாயிகளின் பெயர் அதில் இல்லை. நெல் புரோக்கர்கள் பெயர் தான் உள்ளது. எனவே கடந்தாண்டு பின்பற்ற பட்ட முறைப்படி விவசாயிகள் தங்களது நிலத்திற்குரிய கிராம நிர்வாக அதிகாரியின் 10க்கு 1 அடங்கல் இருந்தாலே நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Related Stories: