ஆலங்குளத்தில் மதுபானக் கூடமாக மாறி வரும் உணவு பாதுகாப்பு அலுவலகம்-நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆலங்குளம் : ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே  உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகம் உள்ளது. கடந்த ஜூலை மாதம் இங்கு உணவு பாதுகாப்பு அலுவலராக பணி  செய்த ரவி என்பவர் பணிமாறுதல் காரணமாக நாகர்கோவில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. வேறு அலுவலர் இங்கு நியமனம் செய்யாததால் உணவு பாதுகாப்புத் துறை  அலுவலகம் பூட்டியே காணப்படுகிறறுது. இந்நிலையில் ஆலங்குளம் பகுதியை கூடுதல் பொறுப்பாக பாவூர்சத்திரம் அலுவலர் கவனிக்கிறார்.

வாரம் ஒருநாள் மட்டுமே ஆலங்குளம் அலுவலகத்திற்கு உணவு பாதுகாப்பு அலுவலர் வருவதாக அறிவிப்பு அலுவலக வாசலில் ஒட்டப் பட்டுள்ளது. இதனால் உணவு பாதுகாப்பு உரிமம் புதுப்பித்தல் மற்றும் உரிமம் பெறுதல் சம்பந்தமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அலைகழிக்கப்படுகின்றனர். மேலும் அந்த அலுவலகம் பூட்டிய நிலையில் உள்ளதால்  மதுபிரியர்கள் தங்கும் விடுதியாகவும், மதுபானக்கூடமாகவும் மாறி வருகிறது.  எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தபட்ட துறையினர் தனிக்கவனம் ெசலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இங்கு புதிதாக உணவு பாதுகாப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories:

>