×

உயரும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ரூ.34,992க்கு விற்பனை..கலக்கத்தில் நகை பிரியர்கள்..!!

சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் 34 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு 14 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,374க்கும், ஒரு சவரன் ரூ.34,992க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 37,904 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.63.80 காசுகளுக்கும், ஒரு கிலோ 63,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை அதிரடி உயர்வால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது.

ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.34,880க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,360க்கு விற்பனை ஆனது. இதேபோல் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.20க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.34,992க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் இந்த விலையேற்றம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Chennai , Chennai, gold, razor, increased by Rs 112 to Rs 34,992
× RELATED சென்னையில் பைக்கில் இருந்து தவறி விழுந்த நபர் மின்சாரம் தாக்கி பலி