தமிழகத்தில் புதிதாக 1,661 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,53,034 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,661 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,47,041 ஆக உயர்ந்துள்ளது. 16,948 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாள் மட்டும் 1,623 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று  வந்த 23  பேர் நேற்று உயிரிழந்தனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 35,360. மேலும் சென்னையில் நேற்று 206 பேர், கோவை 211, செங்கல்பட்டு 111 பேர், ஈரோடு 117 என 4 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>