ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் புடின் கட்சி அபார வெற்றி

மாஸ்கோ: ரஷ்யாவின் நாடாளுமன்ற கீழவைக்கான தேர்தலில் அதிபர் புடினின் யுனைடெட் ரஷ்யா கட்சி மீண்டும் பெரும்பான்மை வெற்றியை பெற்று முன்னிலையில் உள்ளது. ரஷ்யாவின் நாடாளுமன்ற கீழவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி அன்றைய இரவே தொடங்கப்பட்டது. இந்நிலையில் அதன் முடிவுகள் நேற்று வெளியாகத் தொடங்கின. 85 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதிபர் புடினின் யுனைடெட் ரஷ்யா கட்சி 49.7 சதவீத வாக்குகளுடன் பெரும்பான்மை வெற்றியை உறுதி செய்துள்ளது. மொத்தமுள்ள 450 இடங்களில் புடினின் கட்சி 315 இடங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் மீண்டும் அதிபர் புடினின் கட்சி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளது.

Related Stories: