பெங்களூருவை தகர்க்க சதி ராஜஸ்தானை சேர்ந்த பாக். ஐ.எஸ் உளவாளி கைது

பெங்களூரு: பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடந்த தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து மாநகர போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வாலிபர் ஒருவர் முக்கிய கட்டிடங்கள், ராணுவ பயிற்சி மைய அலுவலகங்கள் அருகே சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இவரை கண்காணித்த போலீசார் காட்டன்ேபட்டையில் ஒரு வீட்டில் தங்கியிருந்த போது நேற்று கைது செய்தனர்.

இவர் தங்கியிருந்த வீட்டில் நடத்திய சோதனையில், ராணுவ மையத்தின் முக்கிய வரைபடங்கள், பள்ளிகள், பயிற்சி மையம், ரயில்,பஸ், விமான நிலைய வரைபடங்கள், முக்கிய கோயில்களின் படங்களை பறிமுதல் செய்தனர். வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி போலீசார், ‘அவர் ராஜ்ஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஜிதேந்தர் சிங் என்றும் தெரியவந்தது. இவர் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு வரைபடங்களை அனுப்பி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரது வீட்டில் இருந்து கேமரா, லேப்டாப், செல்போன் உள்பட எலக்ட்ரானிக் உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories:

>