தலிபான் தீவிரவாதிகளால் காஷ்மீருக்கு அச்சுறுத்தலா? சுட்டு வீழ்த்துவோம் என்கிறது ராணுவம்

ஸ்ரீநகர்: ‘தலிபான்கள் காஷ்மீரில் ஊருடுருவதற்கான சாத்தியங்கள் குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என ராணுவ லெப்டினன்ட் கமாண்டர் டி..பி.பாண்டே கூறி உள்ளார். இது குறித்து ஸ்ரீநகர் ராணுவ கமாண்டரும், லெப்டினன்ட் ஜெனரலுமான டி.பி.பாண்டே கூறியிருப்பதாவது: தலிபான்கள் ஊடுருவி விடுவார்கள் என யாரும் பயப்பட வேண்டியதில்லை. தலிபான்களோ, வெளிநாட்டு தீவிரவாதிகளோ, உள்நாட்டு தீவிரவாதிகளோ யாருமே நம்மை எதுவும் செய்து விட முடியாது.  

தற்போது காஷ்மீரில் 60-70 வெளிநாட்டு தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம். அவர்கள் வெடிகுண்டு வைக்கவோ, தாக்குதல் நடத்தவோ வரவில்லை. அவர்களின் வேலை காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் ஆயுதத்தை தருவதுதான். இதுதான் தேச துரோக சக்திகளின் யுக்தி. இதை நம் இளைஞர்களும், காஷ்மீர் மக்களும் புரிந்து கொண்டு தவறான வழிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே கொரோனா கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து காஷ்மீரில் நேற்று முதல் 10, 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

Related Stories:

>