மகளிர் ஒருநாள் கிரிக்கெட் முதல் போட்டியில் இன்று இந்தியா - ஆஸி. மோதல்

மெக்கே: ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, மிதாலி ராஜ் தலைமையில்  3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியிலும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாட உள்ளது. ஒருநாள் ஆட்டங்கள் செப்.21, 24, 26ல் மெக்கே நகரிலும், டெஸ்ட் மற்றும் டி20 ஆட்டங்கள் குயின்ஸ்லாந்து நகரிலும் நடக்க உள்ளன. அதற்காக இந்திய  மகளிர் அணி  ஆக.29ல் பிரிஸ்பேன் சென்றது. அங்கு 14 நாள் கட்டாய குவரன்டைனுக்கு பிறகு கடந்த ஒரு வாரமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஒரு நாள் தொடரில் விளையாட நேற்று முன்தினம் மெக்கே போய்ச் சேர்ந்தனர். இந்நிலையில், முதல் ஒருநாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று காலை 5.35 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இப்போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் காயம் காரணமாக விளையாட மாட்டார் என பயிற்சியாளர் ரமேஷ் பொவார் தெரிவித்துள்ளார்.

Related Stories: