உலகம் முழுக்க பைக்கில் சுற்ற அஜீத் திட்டம்

சென்னை: நடிகர் அஜீத் அடிப்படையில் ஒரு பைக் ரேசர். ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றிருக்கிறார். அடிக்கடி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்வார். சமீபத்தில், ரஷ்ய நாட்டுக்கு சென்ற அவர் அங்கு 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், அஜீத் உலகம் முழுக்க பைக்கிலேயே சுற்றும் சாகச பயணம் ஒன்றை நிகழ்த்த முடிவு செய்திருக்கிறார். இதற்காக, டெல்லி சென்றுள்ள அவர் உலகம் முழுக்க பைக்கிலேயே பயணம் செய்த சாகச வீராங்கனை மாரல் யாசர்லூவை சந்தித்தார். இவர், உலகில் 7 கண்டங்களையும் இணைக்கும் 64 நாடுகளை பைக்கிலேயே சுற்றி வந்தவர். அவரிடம் தனது உலக பைக் சாகச பயணம் குறித்து அஜீத் பேசினார். இதுகுறித்து ஆலோசனைகளை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். 2022ம் ஆண்டு அஜீத் தனது சாகச பயணத்தை மேற்கொள்வார் என்று தெரிகிறது.

Related Stories:

>