ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்: முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக முந்தைய ஆளுநரால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் புதிய கவர்னரிடம் அழுத்தம் கொடுக்க முடியாது” என்று சட்ட அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். எனவே, முதலமைச்சர் இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, தனிப்பட்ட முறையிலும், திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலமும் மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை கொடுத்து திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 7 பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.

Related Stories:

>