தனித்து போட்டி என்று அறிவித்துள்ள பாமகவிடம் தேர்தல் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: பாஜ ஆட்சியில், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு என்கிறார்கள். பொருளாதாரம் முடங்கி இருந்தபோது விலை உயர்ந்தது உண்மைதான். பெட்ரோல், டீசலை  ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு. ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல் விலை கொண்டு வந்தால் 30 முதல் 35  ரூபாய் வரை விலை குறையும். பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, கட்டணம் இலவசம் என்பது வரவேற்கத்தக்கது. இது மாநில அரசின் கடமை. உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு எங்கேயும் வெளியாகவில்லை. எனவே இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக- பாஜ கூட்டணி இடையே கூச்சல், குழப்பம் எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவு எட்டப்படும்.

Related Stories: