ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு அதிமுகவை எச்சரித்து வெளியிடப்பட்டதா? தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை: ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக பாம அறிவித்தது. கடந்த தேர்தலின்போது அதிமுகவினர் ஒழுங்காக ஒத்துழைப்பு தரவில்லை. சொந்தக் கட்சிக்காரர்களை கூட கட்டுப்படுத்த அதிமுக தலைவர்களால் முடியவில்லை. அவர்களுடன் கூட்டணி வைத்தால் நாம் வெற்றி பெற முடியுமா. தற்போதுள்ள சூழ்நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்தால் நமக்கு சரி வராது. குறிப்பிட்ட சீட் கிடைக்காது அதனால் தனித்தே போட்டியிடலாம் என்று முடிவு எடுத்ததாக பாமக தரப்பில் விளக்கம் தரப்பட்டது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாமக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளதால் எந்த இழப்பும் இல்லை என்று தெரிவித்தார். எனினும், அதிமுகவில் உள்ள சில தலைவர்கள் பாமக, மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் மறைமுகமாக அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘LOCAL- UNDER- STANDING’\\” என்று பதிவிட்டு அதனை அழித்துள்ளார். மேலும், UNDERSTAND. புரிஞ்சுதா என்றும் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு புதிய பிரச்னையை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிவு என்பது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாமக தலைவர்கள் எடுத்த முடிவு. புரிந்ததா என்ற கோணத்தில் அவர் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுகவினர் மீண்டும் கூட்டணிக்கு வாருங்கள் என்று ரகசியமாக அழைப்பு விடுப்பதை எச்சரிக்கை விடுக்கும் வகையில் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. திரும்ப, திரும்ப அழைக்க வேண்டாம் என்ற விதத்தில் இதனை பதிவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸின் பதிவு, ‘புரிந்தவர்களுக்கு புரிந்து இருக்கும்’ என்ற கோணத்தில் பதிவிட்டுள்ளதாக பாமகவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>