×

மோடியை ராகுலால் வீழ்த்த முடியாது: திரிணாமுல் கருத்துக்கு காங். பதிலடி

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் ஒன்றிய பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற போது, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘ஜகோ பங்களா’வில் ராகுல் காந்தியை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘பிரதமர் மோடிக்கு மாற்று சக்தியாக உருவெடுக்க ராகுல் காந்தி தவறிவிட்டார்; மம்தா பானர்ஜி அதில் வெற்றி பெற்றுவிட்டார்’ என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘பிற கட்சிகளின் தலைவர்களை இழிவுபடுத்துவதன் மூலம், எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை கட்டி எழுப்பமுடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்கட்சிகளின் ஒற்றுமைக்கு எதிராக திரிணாமுல் செயல்படக் கூடாது’ என்றும் வலியுறுத்தி உள்ளார்.
Tags : Rahul ,Trinamul , Modi cannot be overthrown by Rahul: Kang to Trinamool opinion. Retaliation
× RELATED மீண்டும் காங். தலைவராக பொறுப்பேற்க...