×

திருமணம் செய்துவைக்க கோரி தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் தர்ணா: போக்குவரத்து பாதிப்பு

தர்மபுரி: தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பில் 33வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த எல்லப்பன் வயது 33என்பது தெரியவந்தது. காவல் துறையினரிடமும் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அல்லது எனக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்.

இல்லையேல் இங்கிருந்து வரமாட்டேன் என அடம் பிடித்த அந்த நபரை பொதுமக்கள உதவியுடன் அந்த இடத்தில் இருந்து அப்புற படுத்தியபின்னரே போக்குவரத்து சீரடைந்தது. பின்னர் போதை வாலிபரை காவல்துறையினர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Dharna ,Dharmapuri Four Road , Dharna: A young man was found drunk at the Dharmapuri Four Road junction seeking marriage
× RELATED போலீஸ் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா போராட்டம்