தடுப்பூசி போட்டவருக்கு தங்க மோதிரம் பரிசு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் ஊராட்சியில் கடந்த 12ம்தேதி நடந்த முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் கால் சவரன் மோதிரம் முதல் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நேற்று 2வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. தாசில்தார் பரிமளா முன்னிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் டோக்கன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதில் முதல் பரிசாக நேசமணி என்பவருக்கு கால் பவுன் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. 2ம் பரிசாக செப்பு குடம், 3ம் பரிசாக சில்வர் அண்டா, 4ம் பரிசாக எவர்சில்வர் டிரம், 5ம் பரிசாக செப்பு குடிநீர் பாட்டில், 6வது பரிசு எவர்சில்வர் குடம், 7, 8, 9 மற்றும் 10வது பரிசுகளாக 5 லிட்டர் பால்கேன்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது.

Related Stories:

>