×

சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். சிவகாசி அருகே சரஸ்வதிபாளையத்தில் கோடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை நாக்பூர் லைசென்ஸ் கொண்டு இயக்கப்படுவதாக தெரியவருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிபுரிந்த போது மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் அதேகிராமத்தை சேர்ந்த சின்னமணியப்பன் என்பவர் தனியாக ஒரு அறையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த போது தரையில் ஏற்பட்ட உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் சின்னமணியப்பன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவர் பணிபுரிந்த அறை முற்றிலும் தரைமட்டமானது சம்பவ இடத்திற்கு சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ பரவாமல் தடுத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு சிவகாசி சார் ஆட்சியர் பிரிதிவிராஜ், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் அதிகாரி ஜீவஜோதி, வட்டாட்சியர் ராஜேஷ்குமார், காவல்துறை கண்காணிப்பாளர் பாபுபிரசாத் விரைந்து வந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஆலை உரிமையாளர் மற்றும் போர் மேனை போலீஸ் தேடி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Sivakasi , Sivakasi, Fireworks Factory
× RELATED இது குடிக்க அல்ல... வெடிக்க......