ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் கொந்தளிப்பு

சென்னை: விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பு, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு, பொருளாதார சீரழிவு, வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டு கேட்பு உள்ளிட்ட ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, தமிழகம் முழுவதும் மக்கள் இன்று கொதித்தெழுந்தனர். திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நாகை மாவட்டத்தில் இன்று 50 இடங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் எம்எல்ஏக்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை எம்பி சு. வெங்கடேசன், திமுக, மார்க்சிஸ்ட் தொண்டர்கள், கூட்டணிக்கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், தென்காசி எம்பி தனுஷ் எம்.குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 434 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முத்தரசன்

சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் திமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில குழு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஆகார மகாலில் நடைபெற்றது. இந்த மகால் முன்பு, கட்சியின் பொதுசெயலாளர் டி.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், முத்தரசன், மகேந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் தமிழகம் முழுவதும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>