பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஆழமான பகுதிகள் குறித்து எச்சரிக்கை பதாகை: போலீஸ் நடவடிக்கை

வேளச்சேரி: பெசன்ட்நகர் எலியட்ஸ் கடல்கரையில், எந்தெந்த பகுதிகள் ஆழமானவை, கடலில் குளிக்க தடை செய்யப்பட்ட பகுதிகள் எவை என்பது குறித்து விழிப்புணர்வு எச்சரிக்கை பதாகைகளை போலீசார் வைத்துள்ளனர். சென்னை நகரில் மெரீனா, பெசன்ட்நகர் எலியட்ஸ் பீச் உள்ளிட்ட பல்வேறு கடற்கரை பகுதிகளுக்கு வரும் இளைஞர்கள், கடலுக்குள் இறங்கி குளிக்கின்றனர். இதில் பலர் நீச்சல் தெரியாததாலும், ஆழமான பகுதிக்கு செல்வதாலும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்து செல்வதால் பலியாகின்றனர். குறிப்பாக, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 43 பேர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இதனால் அங்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் 5 இடங்களில் காவல்துறை சார்பில் கடலுக்குள் இறங்கி குளிக்கக்கூடாது என எச்சரிக்கை டிஜிட்டல் பதாகைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடலில் எந்தெந்த பகுதிகள் ஆழமானவை என்பதை சாஸ்திரி நகர் போலீசார் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, அந்த இடங்களில் நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், ரோட்டரி அமைப்புடன் இணைந்து எச்சரிக்கை பதாகைகளை போலீசார் வைத்துள்ளனர்.

Related Stories:

>