தமிழகத்துக்கு வாரம்தோறும் கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை: தமிழ்நாட்டுக்கு 50 லட்சம் தடுப்பூசி கேட்டு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்டோபர் 31க்குள் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் 31ம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை போடுவதற்காக வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

வாரத்திற்கு ஆறு நாட்களுக்கு தினமும் 5 லட்சமும், ஏழாவது நாளில் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தடுப்பூசி முகாம் மூலம் அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories:

>