கச்சிராயபாளையத்தில் 2,650 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

சின்னசேலம் : கச்சி ராயபாளையம் காவல் சரக எல்லைக்கு உட்பட்ட மட்டப்பாறை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, குணசேகர் உள்ளிட்ட போலீசார் மட்டப்பாறையிலிருந்து வயலாம்பாடி செல்லும் சாலையில் சாராயம் காய்ச்ச தயார் நிலையில் 2 பேரல்களில் வைத்திருந்த 900லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் கச்சிராயபாளையம் எல்லைக்கு உட்பட்ட தெங்கியாநத்தம் கிராமத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்ட போலீசார் ரெய்டு செய்தனர். அப்போது கரும்பு காட்டில் 5 பேரல்களில் மறைத்து வைத்திருந்த சுமார் 500லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். அதைப்போல திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் கல்வராயன்மலையில் உள்ள குரும்பாலூர் பென்சார் ஓடையில் சாராய ரெய்டு செய்தனர். அப்போது 750லிட்டர் பிடிக்கக்கூடிய சின்டெக்ஸ் டேங்க் ஒன்றும், 500லிட்டர் பிடிக்கக்கூடிய சின்டெக்ஸ் டேங்க் ஒன்றும் புதரில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து, அவற்றில் இருந்த 1250 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர்.

Related Stories: