பாளை அன்புநகரில் அரைகுறையில் நிற்கும் ரயில்வே மேம்பாலம்-விரைவில் கட்டிமுடிக்க கோரிக்கை

நெல்லை : பாளை தியாகராஜநகர் அருகே அன்புநகரில் அரைகுறையில் நிற்கும் ரயில்வே மேம்பாலத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, இப்பாலத்தை விரைவில் முழுமையாக கட்டிமுடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவேண்டும் என நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதி முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுவிற்கு அவர் அனுப்பியுள்ள மனு விவரம்: நெல்லை மாநகராட்சி தியாகராஜநகர் அருகே அன்புநகரில் ரயில்வே குறுக்கு மேம்பாலம் கட்டுமானப்பணி பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் அரைகுறையில் நிற்கிறது. எனவே இதை முழுமையாக கட்டி முடித்து பொதுமக்களின் ்பயன்பாட்டுக்கு தீர்க்க தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பாலம் ரயில்வே லைனின் கேட் பகுதிவரை இருபுறமும் கட்டி முடித்தும் ரயில்வே ஓவர் பிரிட்ஜ் கட்டப்படவில்லை.

இதனால் பொதுமக்கள். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மிகவும் சிரப்படுகின்றனர். எனவே அரசு உடனடியாக தலையிட்டு பாலத்தின் விடுபட்ட மையப்பகுதியில் உடனடியாக பாலத்தை இணைத்து கட்டி முடிக்கவும் போக்குவரத்திற்கு திறக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>