தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 24ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.!

சென்னை: டெல்டா மாவட்டங்களில் 24ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை ,கள்ளக்குறிச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை வேலூர் திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 23ம் தேதி டெல்டா மாவட்டங்கள், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம்.

 அதேபோல் வருகின்ற 24ம் தேதி டெல்டா மாவட்டங்கள், சேலம், விழுப்புரம் ,கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

Related Stories:

>