நாடாளுமன்ற தேர்தல், பேரவை தேர்தலை நடத்தும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா?: சுப்ரீம் கோர்ட் கேள்வி

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல், பேரவை தேர்தலை நடத்தும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா என்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் கோரிய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த 7 மாதம் கூட தேவையில்லை; 4 மாதம் போதும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்த அவகாசம் கேட்பது பற்றி 2 நாளில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: