உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு திமுக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியீடு.!

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு தி.மு.க. வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதேபோன்று, தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.  

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு தி.மு.க. வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டு உள்ளார்.  மாவட்ட ஊராட்சி, ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Related Stories: