×

கொரோனா தொற்றால் 2 ஆண்டாக முடங்கியிருந்த போக்குவரத்து வார்டன் அமைப்பு மீண்டும் பணியை தொடங்கியது

சென்னை: சென்னையில், 145 போக்குவரத்து வார்டன்கள் உள்ளனர். இவர்கள், வார இறுதி நாட்களில் சரக அதிகாரிகள் குறிப்பிடும் போக்குவரத்து சாலை   சந்திப்புகளில் நின்று சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். மேலும்    புத்தாண்டு, பண்டிகை காலங்கள், தேர்தல் பணி, அனைத்து விதமான வழிபாட்டு   தலங்களின் விசேஷ நாட்களில், முக்கிய பிரமுகர்கள் வருகை மற்றும் பொது   கூட்டங்களின்போதும் வாகன தணிக்கையின் போதும் பணிபுரிகின்றனர்.  மேலும், ரோடு சேப்டி   பேட்ரோல் (ஆர்எஸ்பி) திட்டத்தின் கீழ் சுமார் 470   பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 18,500க்கும் மேற்பட்ட மாநகராட்சி   மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களும், சென்னை போக்குவரத்து காவல் எல்லைக்குள் பல்வேறு சந்திப்புகளில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதால் ஏற்படும் நன்மைகள்   குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.  போக்குவரத்து விழிப்புணர்வு   குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வது   போன்ற விழிப்புணர்வு பணிகளை செய்கின்றனர். போக்குவரத்து வார்டன்கள் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ என்ற குறிக்கோளுடன் கடமை ஆற்றி வருகின்றனர்.

கடந்த   இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து வார்டன்களின் சேவைகள் மற்றும்    மாணவர்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது   போக்குவரத்து வார்டன் அமைப்பு மீண்டும் தங்களது பணியை துவங்கியுள்ளனர். அதன்படி   சென்னை சென்ட்ரல் பாயின்ட், தொழிலாளர் சிலை, காந்தி சிலை, ஸ்பென்சர்   சந்திப்பு, கோயம்பேடு பஸ் நிலையம், நந்தனம் சந்திப்பு, மேட்லி சந்திப்பு,   அண்ணாநகர் ரவுண்டானா மற்றும் கடற்கரை பகுதிகளில் இவர்கள் பணி மீண்டும் தொடங்கி உள்ளனர்.

Tags : Corona, transport, began the mission
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...