×

தமிழகத்தில் 1,697 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழக  மக்கள்  நல்வாழ்வுத்துறை நேற்று  வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று, 1,697 பேருக்கு  பாதிப்பு கண்டறியப்பட்டது.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 26,45,380 ஆக  உயர்ந்துள்ளது. அதேசமயம், 16,969 பேர்  சிகிச்சையில் உள்ளனர். 1,594 பேர் குணமடைந்துள்ளனர். 27  பேர் நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக கோவையில் 4 பேரும், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், சென்னை, மயிலாடுதுறை, புதுக்கோட்ைட ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டிணம், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 1 நபரும் என 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 35,337  பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Corona, Department of Health
× RELATED தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலான...