×

தடுப்பூசி போடாதவர்களுக்கு கொடைக்கானலில் தடை: அதிகாரிகள் அதிரடி

கொடைக்கானல்: கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு கடந்த சில வாரங்களாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. விடுமுறை நாளான நேற்று, கொடைக்கானலில் வனப்பகுதி, முக்கிய சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் வழியில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சித் துறை இணைந்து  சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி இருந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்தனர்.முதல் தவணை தடுப்பூசி போடாத சுற்றுலாப்பயணிகளை எச்சரித்து, அங்கிருந்து திருப்பி அனுப்பினர். அவர்கள் சுற்றுலா இடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சோதனையின் காரணமாக பல கிலோ மீட்டர் வரையில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


Tags : Vaccine, Kodaikanal, authorities
× RELATED 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு...