மகளிர் டென்னிசில் அசத்தும் டீனேஜர்கள்

சமீபத்திய மகளிர் டென்னிஸ் போட்டிகளில் பதின்ம வயது வீராங்கனைகள் தொடர்ந்து அமர்க்களமாக விளையாடி அசத்தி வருகின்றனர். யுஎஸ் ஒபன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு டீனேஜர்கள் எம்மா ரடுகானு (18 வயது), லெய்லா பெர்னாண்டஸ் (19 வயது) முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், லக்சம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட மற்றொரு டீனேஜ் வீராங்கனை கிளாரா டாவ்சன் (18 வயது, டென்மார்க்) தகுதி பெற்றுள்ளார். அரை இறுதியில் செக் குடியரசின் மார்கெடா வோண்ட்ருசோவாவுடன் (22 வயது) மோதிய கிளாரா 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். பைனலில் லாட்வியாவின் ஜெலினா ஓஸ்டபென்கோவை (24 வயது) அவர் எதிர்கொள்கிறார்.

Related Stories:

>