கோஹ்லி விலகல் லாரா அதிர்ச்சி...

ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர் சர்வதேச டி20 போட்டிகளுக்கான இந்திய அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக விராத் கோஹ்லி அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறுகையில், ‘அனைத்து பெரிய அணிகளுக்கு எதிராகவும் விளையாடி வெற்றிகளைக் குவித்துள்ள கோஹ்லிக்கு இது தான் முதல் டி20 உலக கோப்பை. இந்த தொடரே சர்வதேச டி20 கேப்டனாக அவருக்கு கடைசி என்பது மிகப் பெரிய அதிர்ச்சியாக உள்ளது. கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் அவரது இந்த அறிவிப்பை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனக்கும் இது போன்ற பிரச்னைகள் இருந்தது. மன ரீதியாக மிகுந்த அழுத்தம் இருந்ததால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். எனவே, கோஹ்லியின் தனிப்பட்ட முடிவை நாம் மதிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>