யு-16 ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசன் எஞ்சிய ஆட்டங்களை நேரில் பார்த்து ரசிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், அரங்கத்துக்கு வரும் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. துபாய் மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றை காட்ட வேண்டியது கட்டாயம். 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படும். முகக்கவசம், சமூக இடைவெளி மிக மிக அவசியம். நுழைவுச்சீட்டை தங்கள் செல்பேசியில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும்.

ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 16 வயதுக்கு குறைவான ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவை காட்டுவதும் அவசியம். இதற்கான பிரத்யேக ‘ஆப்’-ல் பச்சை டிக் இருந்தால் மட்டுமே ஸ்டேடியத்துக்குள் நுழையலாம். அபுதாபி மைதானத்தில் 12-15 சிறுவர்களுக்கு தடுப்புசி சான்றிதழ் தேவையில்லை என்றாலும், 2 நாட்களுக்குள்ளாக செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவை காட்ட வேண்டும்.

Related Stories:

>