சொல்லிட்டாங்க...

வேளாண் சட்டங்கள் விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. 2023 சட்டப்பேரவை தேர்லில் பாஜ வெற்றி பெற வேண்டும் என்றால் அது சாதாரண விஷயம் கிடையாது. அது அக்னி தேர்வு போன்றது.    :- கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

தமிழக அரசு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் உடனடியாக ஒப்புதல் அளித்து சட்டமாக்க வேண்டும்.    :- விசிக தலைவர் திருமாவளவன்

நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, அவற்றை விவசாயிகளின் நலன் கருதி, காலம் தாழ்த்தாமல் திறக்க ேவண்டும்.    :- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

டெல்லி-மும்பை  விரைவு சாலை 2023ம் ஆண்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதும், அதன் மூலம்  ஒன்றிய அரசுக்கு மாதம் ரூ.1500 கோடி வரை வருவாய் கிடைக்கும்.    :- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

Related Stories:

>